தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறைகள் ரத்து!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சனிக்கிழமை விடுமுறைகள் ரத்து!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சனிக்கிழமை விடுமுறைகள் ரத்து!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறைகள் ரத்து!

இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பத்திரப் பதிவு செய்ய ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

விடுமுறை ரத்து

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இனி வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. அதாவது, தமிழக சட்டப்பேரவையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இத்துறையில் கடந்த ஆண்டை விட ரூ.8760.83 கோடி கூடுதலாக மொத்தம் ரூ.1,04,970.06 கோடி வருவாய் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து பதிவுத் துறையில் இந்த ஆண்டு அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.3270.57 கோடி என்றும் இதன் மூலம் மொத்தம் ரூ.13,913.65 கோடியாக ஆண்டு வருவாய் உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பதிவுத்துறையில் வருவாயைப் பெருக்குவது குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு இடையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு செயல் திட்டங்களை ஏற்படுத்தியதன் மூலம் தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சாதனை செய்ய ஐடியா கொடுத்த எழில், பாக்கியாவை நக்கலடித்து கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இப்போது சட்டமன்ற பேரவையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 32 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பி.மூர்த்தி இனி சனிக்கிழமைகள் தோறும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் , அன்று ஒரு நாள் பத்திரம் பதிவு செய்ய ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படும், தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும், அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இப்போது வார விடுமுறை நாள் அன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here