EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை அப்டேட் செய்வது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நாமினியை அப்டேட் செய்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நாமினியை அப்டேட் செய்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை அப்டேட் செய்வது எப்படி?

பிஎஃப் கணக்குடன் நாமினியை இணைப்பதை EPFO கட்டாயமாக்கியுள்ளது. பிஎஃப் கணக்குடன் நாமினியை இணைப்பதன் முலமாக என்னென்ன நன்மைகள் பெறப்படுகிறது என்பது குறித்தான அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாமினி அப்டேட்:

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது கணக்கில் நாமினிகளை இணைக்க வேண்டும் என்பதை EPFO கட்டாயமாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் வாடிக்கையாளர்கள் விபத்து உள்ளிட்ட சில காரணங்களால் திடீரென இறக்க நேரிடும் சமயத்தில் தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தால் மட்டுமே பென்ஷன் உள்ளான அனைத்து பயன்களையும் பெற முடியும். பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைக்கவில்லையெனில் பிஎஃப் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பட்ஜெட்டில் ஏமாற்றம்!

ஏற்கனவே தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தவர்களும் புதிய நாமினிகளை இணைக்கும் வண்ணம் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலமாகவே எளிதில் நாமினியை தேர்வு செய்யவும் மற்றும் புதிய நாமினியை அப்டேட்டும் செய்துகொள்ளலாம். பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது நாமினியை அப்டேட் செய்துவிட்டால் பிஎஃப் உறுப்பினர்கள் EDLI (தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீடு) திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் ரூ.7 லட்சம் வரை பயன் பெற முடியும்.

தமிழகத்தில் மார்ச் 26, 30ம் தேதிகளில் விடுமுறை – கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய அறிவிப்பு!

மேலும், புதிய நாமினியை அப்டேட் செய்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது உறுப்பினர்களின் பிஎஃப் நம்பர், கணக்கு எண், பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பிஎஃப் அமைப்பு ஒரு போதும் போன் கால், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேட்கமாட்டார்கள். இதனால் இத்தகைய ஆவணங்கள் குறித்தான விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!