தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எனவே மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு 2003ம் ஆண்டு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அதிமுக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் பணி நிறைவிற்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவை மறுக்கப்பட்டது. இது அரசு ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. ஊழியர்களின் பணி காலத்தில் அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு – நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
மாதாந்திர ஓய்வூதியம் இல்லை எனில் அரசு ஊழியர்கள் பணி நிறைவிற்கு பிறகு தங்கள் வாழ்க்கையை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும். தங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய பிறரை நாடும் நிலை ஏற்படும் என கருத்து தெரிவித்தனர். மேலும் ஓய்விற்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டால் முதுமை காலத்தில் பேருதவியாக இருக்கும். எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தார்.
TN Job “FB
Group” Join Now
அதன் படி மு.க ஸ்டாலின் பதவியேற்றதும் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தார். இந்த குழு தனது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி போக்குவரத்து கழக நிர்வாகிகளின் தங்கள் பணியாளர்களின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.