தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் உறுதி!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் 12 ஆம் வகுப்புக்கான 2வது திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நடவடிக்கைக்காக விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.

அமைச்சர் உறுதி:

தமிழகத்தில் கொரோனா 2வது அலைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி மாதத்தில் , இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் மாதத்தில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இருப்பினும் கொரோனா 3வது அலை காரணமாக ஜனவரி மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. இதனால் முதல் திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா பரவல் சற்று குறைந்தவுடன் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திலும் , இரண்டாவது திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்திலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் இம்மாவட்டத்திற்கு ஏப்ரல் 11 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு!

இதை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு மார்ச் மாதத்திலும் , இரண்டாவது திருப்புதல் தேர்வு, மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இந்த அட்டவணைபடி, தேர்வுகள் நடைபெற்றது. அண்மையில் பிளஸ் 2 முதல் திருப்புதல் கணிதத் தோ்வு, பத்தாம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் வெளியானது. இந்த வினாத்தாள் வெளியானது குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கிளம்பியது. இதற்கு பள்ளிக்கல்வி துறை குற்றம் செய்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் இன்று பிற்பகல் நடைபெறும் 12ஆம் வகுப்புக்கான 2ஆவது திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆகி உள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 4 முதல் விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

இது குறித்து செய்தியாளரை சந்த்தித்த பள்ளிகல்விதுறை அமைச்சர், ஜன்னல் இல்லாத அறைகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும் 1,200 அறைகளுக்கும் காவலர்கள் நியமிக்கப்படுவது கட்டாயம். தேர்வு நேரத்தில் முறைகேடுகளை தடுக்க 3,050 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்படும். தேர்வில் காப்பியடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளியான வினாத்தாளில் உள்ள எந்தக் கேள்வியும் நடைபெறும் தேர்வில் கேட்கப்படாது என அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here