தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 35,000/- வரை ஊதியம்

0
தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 35,000/- வரை ஊதியம்
தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 35,000/- வரை ஊதியம்
தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 35,000/- வரை ஊதியம்

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், கணக்காளர் மற்றும் லேப் டெக்னீசியன் ஆகிய பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விபரங் களை இப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் 2007 இல் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான இது சென்னையின் புறநகரில் அமைந்துள்ளது. தற்போது IIITDM காஞ்சிபுரம் பின்வரும் தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

1. அலுவலக உதவியாளர் பணியில் 03 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். HR / நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தி உட்பட பிற பிராந்திய மொழிகள் தெரிந்திருந்தால் முக்கியத்துவம் அளிக்கப்படும். MS Office உள்ளிட்ட கணினி பயன்பாடுகள் குறித்தும் அறிந்திருந்த வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மாத ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்படும். முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு பணிபுரிய வேண்டும்.

Exams Daily Mobile App Download

2. கணக்காளர் பணியில் ஒரு காலியிடம் உள்ளது. இதற்கு பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் TALLY / கணக்குகள் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் ஐந்தாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பேச்சுத்திறன், ஆளுமை பணிகளில் சிறப்பாக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.30,000/- முதல் 35,000/- வரை ஊதியம் வழங்கப்படும். ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும்.

3. லேப் டெக்னீஷியன் பிரிவில் ஒரு காலியிடம் உள்ளது. இதற்கான அத்தியாவசிய தகுதியாக B.E./ B.Tech. இயந்திர பொறியியலில்/மெகாட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டேஷன்/உற்பத்தி/ஈக்விடி ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட அனுபவத்துடன் இருத்தல் சிறந்தது. இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.32,000/- வரை ஊதியம் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு பணிபுரிய வேண்டும்.

TN’s Best Coaching Center

எனவே மேற்கூறிய பணியிடங்களுக்கு தகுதியும், அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணைப்பில் பதிவு செய்ய வேண்டும். மேலும் நேர்முகத்தேர்வுக்கு பயோ-டேட்டா மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்கள்/கல்வித் தகுதிகள், அனுபவ ஆவணங்கள் அதன் நகல் மற்றும் சமீபத்திய புகைப்படத்துடன் நேரில் வருவது அவசியம். அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு 16.08.2022 (செவ்வாய்கிழமை) காலை 08:30 மணிக்கும், கணக்காளர் பணிக்கு 17.08.2022 (புதன்கிழமை) காலை 08:30 மணிக்கும், லேப் டெக்னீஷியன் 18.08.2022 (வியாழன்) காலை 08:30 மணிக்கும் நேர்முகத்தேர்வு தொடங்கி நடைபெறும். இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்த வேண்டியதில்லை.

நேர்காணல் நடைபெறும் இடம்:

நிர்வாகப் பிரிவு,
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி,
காஞ்சிபுரம்,
மேலக்கோட்டையூர்,
வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை,
சென்னை-600 127

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!