10வது முடித்தவர்களுக்கு ரூ.78,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
10வது முடித்தவர்களுக்கு ரூ
10வது முடித்தவர்களுக்கு ரூ
10வது முடித்தவர்களுக்கு ரூ.78,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!

தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் கடந்த மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மத்திய அரசு பணி:

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II  போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக மே மாதம் அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு  விண்ணப்பிக்க முதலில் மே 14 ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக ஜூலை 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிகளுக்கு மொத்தம் 337 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்வோர் அந்தந்த பணிக்கு ஏற்ப Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதியான நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!