SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் & பான் இணைப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் – பான் இணைப்பு குறித்த முக்கிய தகவல்களை ஒரு லிங்க் மூலம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் – பான் இணைப்பு:
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், வரி செலுத்துவோர் என அனைவரும் தங்களது ஆதாரை பான் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த சேவைகளை பெற்றுக் கொள்ள பிப்ரவரி மாதம் இறுதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா புதிய பாதிப்புகள் தீவிரமடைந்து வந்ததை தொடர்ந்து இந்த பான் – ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மால்கள், உணவகங்கள் மீண்டும் திறக்க அனுமதி? மகாராஷ்டிரா அரசு ஆலோசனை!
எனினும் இறுதி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க இந்த சேவைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படும் சிரமத்தை தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்குமாறு நினைவூட்டியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் நிரந்தர கணக்கு எண் (PAN) எண் ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டால், பான் செயலற்றதாகவோ அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாததாக மாறிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவைகளை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்கள் www.incometax.gov.in என்ற வருமான வரி வலைத்தளத்திற்கு சென்று, Link Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதில் உங்கள் ஆதார் – பான் இணைப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.