‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகர் நவீன் தனது வருங்கால மனைவிக்காக செய்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் வாழ்த்து!

0
'இதயத்தை திருடாதே' சீரியல் நடிகர் நவீன் தனது வருங்கால மனைவிக்காக செய்த சர்ப்ரைஸ் - ரசிகர்கள் வாழ்த்து!
'இதயத்தை திருடாதே' சீரியல் நடிகர் நவீன் தனது வருங்கால மனைவிக்காக செய்த சர்ப்ரைஸ் - ரசிகர்கள் வாழ்த்து!
‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகர் நவீன் தனது வருங்கால மனைவிக்காக செய்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் வாழ்த்து!

அன்றாட வாழ்வில் தினமும் செய்திகள் பார்ப்பது தாண்டி இவங்களுக்காகவே செய்தி பார்க்கும் அளவுக்கு மக்கள் மனதை ஈர்த்த செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் சின்னத்திரை நடிகர் நவீனுக்கும் திருமணம் நிச்சயமானதை அடுத்து தற்போது நவீன் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ் அனைத்து பெண்கள் மனதையும் பொறாமை கொள்ள வைத்துள்ளது.

நவீன் பிறந்தநாள் சர்ப்ரைஸ்:

செய்தி வாசிப்பாளர்கள் அனிதா சம்பத், மற்றும் சரண்யா துரடி சுந்தராஜ் ஆகியோர் வரிசையில் அதிக அளவு இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் கண்மணி. இவர் அழகிலும், தமிழ் வாசிக்கும் விதத்திலும் பார்வையாளர்களை தன் வசம் ஈர்த்தவர் என்றே சொல்லலாம். காவிரி டிவி, மாலை முரசு, ஜெயா டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த கண்மணி தற்போது சன் டிவியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சினிமா துறையில் பல வாய்ப்புகள் வந்தும் விருப்பம் காட்டாமல் செய்திகள் வாசிப்பதே என் கனவும் ஆசையும் என்று தவிர்த்து வருகிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – செல்வத்தை கையும் களவுமாக பிடித்த சந்தியா!

இப்படி இருக்கையில் சமீபத்தில் இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன் அவர்களுடன் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. அந்நிகழ்வின் புகைப்படங்கள் நவீன் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது தான் மிச்சம். ஏனெனில் பல இளம் பெண்களின் இதயத்தை திருடிய கனவு கண்ணன் தான் சின்னத்திரை நடிகர் நவீன். அவர் நடித்த முதல் சீரியலிலே பிரபலமாகி அவருக்கு ஜோடியாக நடித்த ஹீமா பிந்துவை ஆன் ஸ்கிரீனில் ரசித்த ரசிகர்கள் நிஜத்திலும் இணைந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கண்மணியுடன் காதலாகியது சற்று சர்ப்ரைஸாக மாறியது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து இந்த மாதம் நவீன், கண்மணி திருமணமும் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய கண்மணிக்கு அவரது வருங்கால கணவரான நவீன் பல சர்ப்பிரைஸ்களை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். பிறந்தநாளன்று நவீன் பல பெண்களின் எதிர்பார்ப்பு கனவை போலவே புது புது சர்ப்ரைஸுகளையும், கேக் கட்டிங், டேட்டிங் என மாஸ்ஸாக கண்மணிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதனை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பல லைக்குகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!