CA தேர்வு மைய வழிகாட்டு நெறிமுறைகள் – ICAI வெளியீடு!

0
CA தேர்வு மைய வழிகாட்டு நெறிமுறைகள் - ICAI வெளியீடு!
CA தேர்வு மைய வழிகாட்டு நெறிமுறைகள் - ICAI வெளியீடு!
CA தேர்வு மைய வழிகாட்டு நெறிமுறைகள் – ICAI வெளியீடு!

கணக்கீட்டாளர் பணிக்கான CA தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

கடந்த ஆண்டு கணக்கீட்டாளர் பணிக்கான CA தேர்வுகள் நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் CA தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வாளர்களுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்களை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ICAI) அறிவித்துள்ளது. அந்த வகையில் தேர்வு மைய வழிகாட்டுதல்கள் முன்பு அறிவிக்கப்பட்டதைப் போல செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு அமைப்பு – 8 உறுப்பினர்கள் நியமனம்!

கூடுதலாக தேர்வுகள் குறித்து ICAI கூறுகையில், ‘தற்போதுள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஜூலை 2021 CA தேர்வுக்கான தேர்வு மையங்கள், பரீட்சை செயல்பாட்டாளர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் முன்பு அறிவிக்கப்பட்டதைப் போலவே செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன் படி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி CA தேர்வுகள் நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில், ICAI தலைவர் நிஹார் என்.ஜம்புசரியா தேர்வுகள் குறித்து கூறுகையில், ‘ஜூலை மாதத்தில் CA தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று நிலைமை சீராகவில்லை என்றால், CA தேர்வுகள் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என்று கூறியுள்ளார். மேலும் அப்போதுள்ள கொரோனா நிலையை கருத்தில் கொண்டு, தேர்வுக் குழு நிலைமையைக் கண்காணித்து இது தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!