IBPS PO / MT 2023 மதிப்பெண் பட்டியல் வெளியீடு – முழு விவரம் இதோ!

0
  IBPS PO / MT 2023 மதிப்பெண் பட்டியல் வெளியீடு - முழு விவரம் இதோ!

IBPS என்னும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது 2023ம் ஆண்டில் நடைபெற்ற PO / MT 2023 முதன்மை தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

இந்திய வங்கிகளில் காலியாக உள்ள Probationary Officer / Management Trainee பணிகளுக்கென 2023ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 3049 பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கான IBPS PO / MT 2023 முதன்மை தேர்வானது 2023 டிசம்பர் 5 அன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முடிவுகள் 2024 ஜனவரி 30 அன்று வெளியானது.

TNHRCE சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்நிலையில் முதன்மை தேர்வு மூலம் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மதிப்பெண் பட்டியலானது நேற்று (14.03.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://ibpsonline.ibps.in/ என்ற வலைதள பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிடுவதன் மூலம் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இம்மதிப்பெண் பட்டியலை பெற 14.03.2024 அன்று முதல் 31.03.2024 அன்று வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!