மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் தலைமையக காலாட்படை பள்ளியில் (HQ Infantry School) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Draughtsman, Lower Division Clerk, Stenographer, Cook போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை (25.07.2022) இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தலைமையக காலாட்படை பள்ளியில் (HQ Infantry School) காலியாக உள்ள Draughts Man, Lower Division Clerk, Stenographer, Civilian Motor Driver, Cook, Translator, Barber, Stenographer Grade-II, Civilian Motor Driver (OG), Artist or Model Maker ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 101 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma |முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Civilian Motor Driver (Ordinary Grade), Artist or Model Maker மற்றும் Draughtsman ஆகிய பணிகளுக்கு குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 27 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • மற்ற பணிகளுக்கு குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 25 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST – 05 வருடம், OBC – 03 வருடம், PWD – 10 வருடம், PWD (OBC) – 13 வருடம், PWD (SC/ST) – 15 வருடம் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
  • Barber, Artist or Model Maker பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Lower Division Clerk, Civilian Motor Driver (OG), Translator, Cook பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Draughtsman, Stenographer Grade-II பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test, Skill Test மற்றும் Trade Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், SC / ST / PwD பிரிவினர், உடல் ஊனமுற்றவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருநாள் (25.07.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!