அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை அறிவது எப்படி? முழு விவரம் இதோ!!

0
அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை அறிவது எப்படி? முழு விவரம் இதோ!!

உங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை எவ்வாறு கண்டறிவது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் சேவை மையம்:

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. ஏதேனும், ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டுமெனில் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று ஆதாரை அப்டேட் செய்யலாம். தற்போது எப்படி நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்தை கண்டறிவது என்பதை காணலாம்.

முதலில் mAadhaar என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யவும். அதன் பின்னர், OTP ஐ பதிவு செய்தால் அதன் முகப்பு பக்கத்தில் என்ரோல்மென்ட் சென்டர் என்ற ஐகான் இருக்கும். அதனை, கிளிக் செய்து More என்கிற பிரிவிற்கு சென்றால் லோகெட் என்ரோல்மென்ட் சென்டர் என்கிற ஆப்ஷன் இருக்கும். அதனை, கிளிக் செய்தால் நீங்கள் அருகில் இருக்கும் ஆதார் மையங்களின் பட்டியல் காண்பிக்கப்படும். மேலும், ஆதார் மையங்களின் முகவரி மற்றும் மொபைல் எண் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!