தமிழக அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. அதனால் மக்களின் தேவை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கோரிக்கை:

தமிழகத்தில் தற்போது பேரிடர் காலத்திற்கு பின் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றனர். பேரிடர் காலத்தில் குறைவான ஊழியர்களுடன் பணிகள் நடைபெற்றது. அதனால் பல சேவைகள் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலுக்கு பின் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பணிகளை வழக்கம் போல செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் படி ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி சார்பில் வெளியான அறிக்கையின் படி, மக்கள் பல்வேறு சலுகைகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களை நாடுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் மக்களின் தேவை, வசதிக்கேற்ப செயல்படவேண்டியது அவசியம். ஆனால், பிரிட்டிஷ் காலத்து அரசு நிர்வாக நடைமுறைகளிலுள்ள சிக்கல்கள், இலஞ்ச-ஊழல் போக்குகள் காரணமாக குறித்த காலத்திற்குள் சேவைகள் கிடைப்பதில்லை. பலநாட்கள் அல்லது பலமாதங்கள் திரும்பத்திரும்ப அரசு அலுவலகங்களுக்கு அலைந்தால்தான் நமது தேவை பூர்த்தியாகும் என்பதே இன்றைய எதார்த்த நிலையாகும் இதனைச் சீரமைக்க “சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டியது அவசியம் என்பதை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் அரியர் மாணவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பலமுறை படையெடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. பன்னெடுங்காலமாகத் தொடரும் இப்பிரச்னையின் ஒருபகுதியைச் சரிசெய்யும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது. பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதலளித்த முதல்வர் அனைவரும் நல்லதொரு முன்னுதாரணத்தைத் தொடங்கி வைத்துள்ளார்கள். இவ்வறிவிப்பு இன்று முதல் (30-04-22, சனிக்கிழமை) செயல்பாட்டுக்கு வருகிறது. சனிக்கிழமை விடுமுறை நாளாகப் பெற்ற பொது மக்களுக்கு இது உதவியாக இருக்கும். அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்காமல், சம்பள இழப்பு இல்லாமல் பத்திரப் பதிவு அலுவலகம் சார்ந்த பணிகளை முடித்துக் கொள்ளலாம்.

இந்த அறிவிப்பின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும் இன்னும் பல அலுவலகங் களில் இதனை அமல்படுத்துவதும், ஞாயிறன்றும் அரசு அலுவலகங்களை இயங்கச் செய்வதுமே அனைத்து மக்களுக்கும் முழுப்பலன் கிடைப்பதை உறுதிசெய்யும். அதிகப்படியான மக்கள் அடிக்கடி வந்துசெல்லும் மின்வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்(RTO), உணவுப்பொருள் வழங்கல் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போன்ற அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கினால் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். காவல்துறை, மருத்துவமனை, தீயணைப்புத்துறை, பேருந்து ஊழியர்கள் போன்ற துறையினர் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பணிபுரிந்துவருகின்றனர் என்பது இச்சமயத்தில் நினைவுகூறத்தக்கது என குறிப்பிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here