பள்ளிகளுக்கு பிப்.16ம் தேதி விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் குஷி!

0
பள்ளிகளுக்கு பிப்.16ம் தேதி விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
பள்ளிகளுக்கு பிப்.16ம் தேதி விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
பள்ளிகளுக்கு பிப்.16ம் தேதி விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் குஷி!

மாசிமகம் திருவிழாவை ஒட்டி வரும் 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தினசரி தொற்று குறைவாக உள்ள மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மாசிமகம் திருவிழாவை ஒட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை – அரசுக்கு வலியுறுத்தல்!

மாசி மாத பௌர்ணமியுடன், மகம் நட்சத்திரம் கூடிவரும் நாளே மாசி மகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் கூடி வருவது சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாசிமக தினத்தில் புண்ணிய தலங்களில் சிறப்பு வழிபாடு, நதிகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி வழிபடுவர். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 16 ஆம் தேதி மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிப்.16ல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாசிமக நாளன்று புதுச்சேரியில் உள்ள திருக்காஞ்சியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறை காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!