CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிப்.16ல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பிப்.16ல் தேர்வு முடிவுகள் வெளியீடு!
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பிப்.16ல் தேர்வு முடிவுகள் வெளியீடு!
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிப்.16ல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்பருவ பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாட்களில் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேர்வு முடிவுகள்:

மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத் இருக்கும் மாணவர்களுக்கு தேர்வுகளை இரண்டு பருவங்களாக நடத்த திட்டமிட்டது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் அதிக அளவில் இருந்த காரணத்தால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் அகமதிப்பீடு முறையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கியது. இந்த முறை பல மாணவர்களுக்கும் திருப்தியை அளிக்கவில்லை.

சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இதனால் தான் இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வை நடத்த கல்வி வாரியம் முடிவு செய்தது. அதன்படி டிசம்பர் மாதம் நடந்த முதல் பருவத்தேர்வில் மாணவர்களுக்கு பலதேர்வு வினாக்கள் மட்டுமே வைக்கப்பட்டது. இரண்டாம் பருவத்தேர்வில் சிறு மற்றும் பெரு வினாக்கள் பகுதி இடம் பெறும் என்றும் 2ம் பருவ தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது முதல் பருவ தேர்வுகளின் மதிப்பெண்கள் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டு காதல் கதையை முதன்முறையாக சொன்ன “குக் வித் கோமாளி” புகழ் – ரசிகர்கள் வாழ்த்து!

இருப்பினும் முதல் பருவத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி, அல்லது தேர்ச்சி இல்லை என்று தெரிவிக்கப்படாது. 2ம் பருவ தேர்வின் முடிவுகளையும் சேர்த்து தான் இந்த முடிவுகள் அறிவிக்கப்படும். CBSE பருவம் 1 தேர்வு முடிவுகள் பிப்ரவரி 16 அன்று cbse.nic.in இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஸ்கோர் கார்டு அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.gov.in, cbseresults.nic.in இல் பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்யும் முறைகள்:

  • முதலில் மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிட வேண்டும்.
  • CBSE வகுப்பு 10, 12 ஆம் வகுப்பு பருவம் 1 முடிவுகள் 2021 என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பெயர் மற்றும் ரோல் எண்ணை போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
  • இப்பொழுது CBSE 10-வது, 12-வது முடிவுகள் 2021 திரையில் தோன்றும்.
  • தற்பொழுது முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here