துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்கும் வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!

0
துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்கும் வழக்கு - தமிழக அரசு
துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்கும் வழக்கு - தமிழக அரசு

துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்கும் வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!

தமிழக அரசு மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க வருகிற மார்ச் மாதம் 15-ஆம் தேதி வரை அவகாசம் தருவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்கும் வழக்கு:

தமிழக அரசு சார்பாக காவல் துறை, தீயணைப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு இடர்படி,மருத்துவப் படி, பராமரிப்பு படி உள்ளிட்ட படிகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்குவது இல்லை எனவே தோழர் சட்ட மையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு ஆலோசனை!!

கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்களின் பங்கு முதன்மையானது, தூய்மை பணியாளர்களில் பலர் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்கிறார்கள் அவர்களில் சிலர் விஷவாய்வு தாக்கி இறந்துள்ளனர். அவ்வாறாக உயிரை பணயம் வைத்து வேலை செய்பவர்களுக்காக அரசு இடர்படி வழங்க வேண்டும்.மேலும், துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பியதாகவும், இந்த கோரிக்கையை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழக நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? – கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!!!

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படி வழங்குவது குறித்து தமிழக அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 15 தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறினால், நீதிமன்றத்துக்கு உதவியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!