CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்?- கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!!!

0
CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்
CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்

CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்?- கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடத்தப்படும் 10 மற்றும் 12 வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடாத காரணத்தால் பொது தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சமூக வலைத்தளத்தில் நேரலையில் இன்று (டிசம்பர் 22) மாலை 4 மணிக்கு சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் குறித்து ஆலோசனை:

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9மாத காலம் முடிந்தது. கடந்த கல்வியாண்டு தேர்வு நடத்த முடியாத காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்க பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) குறைத்தது. இருந்தபோதிலும் மத்திய அரசு கண்டிப்பாக பொது தேர்வு நடைபெறும் எனவும் நேரடியாக மட்டுமே நடைபெறும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது. கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளில் தாமதம் ஏற்படலாம் தவிர தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறினார். இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மத்திய அரசின் காலதாமதம் காரணமாக மாதிரி பொது தேர்வு நடத்தி வருகிறது.

ஆசிரியர் பணி நியமனம் குறித்த அமைச்சரின் அறிவிப்பு – தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கேள்வி!!

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுவதால் பொது தேர்வுக்கான அட்டவணை வெளியிட வேண்டும் என மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு குறித்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை 4 மணிக்கு ஆசிரியர்களுடன் இணைய வழியில் ஆலோசனை நடத்துகிறார். அதில் பொது தேர்வு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். பொதுத்தேர்வு குறித்து ஆசிரியர்கள் தங்களது சந்தேகங்கள், கருத்துகளை ட்விட்டரில் #EducationMinister GoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவிக்க மத்திய கல்விஅமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!