SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

வட்டி விகிதங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI) நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஜூன் 14) முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாற்றத்தின் விளைவாக, SBI வங்கியில் 211 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 2.90% வட்டியை வங்கி தொடர்ந்து வழங்கும் என்று தெரிகிறது.

TN Job “FB  Group” Join Now

இது தவிர 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 3.90% ஆகவும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.40% வட்டியும் தொடர்ந்து கிடைக்கும். ஆனால் 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான வைப்புகளுக்கு SBI வங்கி வட்டி விகிதத்தை 4.40% லிருந்து 4.60% ஆக 20 bps ஆக உயர்த்தியுள்ளது. மேலும் இரண்டு முதல் மூன்று வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகள், முன்பு 5.20 சதவீதத்தில் இருந்து இப்போது 15 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில் இதன் வட்டி விகிதம் 5.35 சதவீதமாக இருக்கும்.

அடுத்தபடியாக 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான வைப்புத்தொகைகளுக்கு SBI வங்கி 5.45 சதவீத வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்கும். அதே நேரத்தில் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD வட்டி விகிதம் 5.50 சதவீதமாக நிலையானதாக இருக்கும். இதற்கிடையில் SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகையின் வழக்கமான விகிதத்தை விட 0.50 சதவீதத்தை கூடுதலாக பெறுவார்கள். மேலும் மூத்த குடிமக்கள் 211 நாட்கள் முதல் அதற்கும் குறைவான வைப்புகளுக்கு 5.10 சதவீத வட்டி விகிதத்தை பெறுவார்கள்.

IT நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தவிர 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவான வைப்புத்தொகைக்கு 5.80 சதவீதம் மற்றும் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 5.85 சதவீதம் என்ற அடிப்படையில் இந்த வட்டி விகிதங்கள் பொருந்தும். இதனுடன் SBI வங்கி மூத்த குடிமக்களுக்காக “SBI Wecare” டெபாசிட் எனப்படும் சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை வழங்குகிறது. இது 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 30 அடிப்படை புள்ளிகள் (bps) கூடுதல் பிரீமியத்தை வழங்குகிறது. இந்த சிறப்புச் சலுகை செப்டம்பர் 30, 2022 வரை மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!