2021-2022 நிதியாண்டில் இளைஞர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரங்கள் இதோ!

0
2021-2022 நிதியாண்டில் இளைஞர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - முழு விவரங்கள் இதோ!
2021-2022 நிதியாண்டில் இளைஞர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - முழு விவரங்கள் இதோ!
2021-2022 நிதியாண்டில் இளைஞர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரங்கள் இதோ!

உலகம் டிஜிட்டல் மயமாகி வருவதால், பயிற்சி பெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அடுத்த நிதியாண்டில் அதிக அளவிலான ஊழியர்களை நியமிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்புகள்:

கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக நாட்டில் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளது. நாட்டில் பொருளாதாரம் அதிக சரிவை சந்தித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் செயல்படவும், தங்களை தக்க வைக்கவும் அதிகம் போராடி வருகின்றது. இது 2020ல் வேலைச் சந்தையை கடுமையாகப் பாதித்தது. இதன் தாக்கம் திடீரென, வியத்தகு முறையில் இருந்தது. ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள 408 நிறுவனங்களில் ஊழியர் எண்ணிக்கை வீழ்ச்சியடையாமல், 2020 நிதியாண்டில் 59 லட்சத்தில் இருந்து 60.7 லட்சமாக 2021 நிதியாண்டில் சிறிதளவு உயர்ந்துள்ளது. முதல் 10 நிறுவனங்கள் அவர்களின் அடிப்படையில், 31.5% ஆக உள்ளனர்.

TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வு!

ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவற்றின் தலைமையில், அவர்களின் ஊழியர்களின் எண்ணிக்கை 2020 நிதியாண்டில் 17.6 லட்சமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் 19.12 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நான்கு முன்னணி ஐடி நிறுவனங்கள் சேர்ந்து 11.2 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்துகின்றன, டிசிஎஸ் [4.89 லட்சம்] முன்னணியில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மாறிவரும் வேலை முறையுடன், ஐடி தீர்வு நிறுவனங்களின் திறன் அதிகரிக்கும் நிலை வந்தது. இதனால் கூடுதல் பணிநியமனங்கள் நடந்தது. 2022ம் நிதியாண்டின் முதல் பாதியில் முதல் ஐந்து நிறுவனங்கள் 122,000 பேருக்கு மேல் புதிதாக பணியமர்த்தியுள்ளனர். இதுவே 2021 நிதியாண்டில் 138,000 நியமனங்கள் மட்டுமே இருந்தது.

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் – மாநில அரசு தகவல்!!

ஐடி நிறுவனங்களைத் தவிர, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பணியமர்தலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. டிசிஎஸ் மற்றும் ஆர்ஐஎல் ஆகிய இரண்டும் கடந்த ஆண்டு தலா 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைச் சேர்த்துள்ளனர். ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய நான்கு தனியார் வங்கிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மற்ற நடுத்தர அளவிலான ஐடி நிறுவனங்களைச் சேர்த்தால், இந்த ஆண்டு மட்டும் 2,00,000 பேர் நியமிக்கப்ட்டுள்ளனர். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 500,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!