சித்ராவை அடித்து கொலை செய்தது ஹேமந்த் தான் – நடிகையின் அம்மா பரபரப்பு பேட்டி!

0
சித்ராவை அடித்து கொலை செய்தது ஹேமந்த் தான் - நடிகையின் அம்மா பரபரப்பு பேட்டி!
சித்ராவை அடித்து கொலை செய்தது ஹேமந்த் தான் - நடிகையின் அம்மா பரபரப்பு பேட்டி!
சித்ராவை அடித்து கொலை செய்தது ஹேமந்த் தான் – நடிகையின் அம்மா பரபரப்பு பேட்டி!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்த விஜே சித்ராவின் மரணம் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சித்ராவின் அம்மா கோவமாக பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.

நடிகை விஜே சித்ரா:

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே சித்ரா. நடுத்தரக் குடும்பத்தில் இருந்து தன்னுடைய திறமையால் மேலே வந்தவர். அவருடைய விளையாட்டுத்தனமான பேச்சிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். வெற்றி மட்டுமே இனி என வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு சென்ற சித்ராவின் வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் ஹோட்டல் ரூமில் தற்கொலை செய்து கொண்டார்.

Exams Daily Mobile App Download

அவருடைய இறப்பு குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த வாரம் கூட அவருடைய கணவர் ஹேமந்த் சித்ராவின் இறப்பில் பெரிய அரசியல் பலம் கொண்ட மாஃபியாக்கள் இருப்பதாகவும், அதனால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் போலீசில் புகார் ஒன்று அளித்திருந்தார். இந்நிலையில் ஹேமந்த்தின் அந்த பேட்டியை அடுத்து சித்ராவின் அம்மா கோவமாக விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் எனக்கே என் பிறந்த நாள் தெரியாது. அவங்க தாத்தா எழுதி வச்சுருந்த நோட்ட பார்த்து என் பிறந்தநாளை கண்டுபிடிச்சு கேக் வெட்டுவா, அன்னையர் தினம் வந்தால் கேக் வெட்டுவா, வெளிநாட்டுக்கு எல்லாம் சென்று எனக்கு நகை வாங்கி கொடுப்பா ஆனால் இந்த ஆண்டு அவள் இல்லாமல் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என சொல்லி இருக்கிறார்.

விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அவளால் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. கடைசி வரைக்கும் இருப்பானு நினைச்சேன். சித்ராவ கொன்னவங்களுக்கு தண்டனை கிடைச்சாதான் தூங்குவேன் என கதறியுள்ளார். மேலும் சித்ரா மரணமடைந்த அன்று இரவு இருவருக்கும் பணம் குறித்த சண்டை நடந்திருக்கு, அதனால் என் மகளை ஹேமந்த் அடிச்சு கொன்னுட்டான். காப்பாத்தனும்னா காப்பாத்தியிருக்கலாம். அவன்தான் கொன்னுட்டான் என உருக்கமாக பேசி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here