புது சீரியலில் கமிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா, முல்லை மீண்டும் மாற்றமா? ஹேமாவின் பதில்கள்!

0
புது சீரியலில் கமிட் ஆன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா, முல்லை மீண்டும் மாற்றமா? ஹேமாவின் பதில்கள்!
புது சீரியலில் கமிட் ஆன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா, முல்லை மீண்டும் மாற்றமா? ஹேமாவின் பதில்கள்!
புது சீரியலில் கமிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா, முல்லை மீண்டும் மாற்றமா? ஹேமாவின் பதில்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா தனது யூடுயூப் சேனலில் மாதம் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் நிலையில் இந்த மாதத்திற்கான வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின் கேள்விகள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றாலே அதில் தற்போது வரும் சின்னச்சின்ன சண்டைகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. புது மருமகள் ஐஸ்வர்யா மற்றும் மீனா இடையில் நடக்கும் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக சென்று வருகிறது. ஐஸ்வர்யாவிற்கு அனைவரும் சலுகைகள் கொடுப்பதை மீனா பொறுத்துக் கொள்ள முடியாமல் அடிக்கடி கோவப்படுகிறார். இதனை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கவனித்தும் பெரிதுபடுத்தாமல் உள்ளனர். இதனால் மீனா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓடுவதற்கு காரணம் என்று கூட பலரும் கூறி வருகின்றனர்.

காதலில் விழுந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ் தனியாக ஒரு யூடுயூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் பலவிதமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மேக்கப், ஷூட்டிங் ஸ்பாட், கொண்டாட்டம், சுற்றுலா இது போன்ற பல தரப்புகளில் இருந்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஹேமாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக அதிகமாக ரசிகைகள் சேர்ந்துள்ளனர். ஹேமா மாதந்தோறும் தனது சேனலில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து ஒரு வீடியோவை வெளியிடுவார்.

தற்போது சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த மாதத்திற்கான ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ரசிகர்கள் அதில், ஹேமாவின் குடும்பம், குழந்தை, சீரியல், சீரியலில் அவர்கள் அணியும் உடை, அவர்களின் மேக்கப், குழந்தைப்பேறு, உணவு பழக்கவழக்கம் இது போன்ற பல கேள்விகளை கேட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் ஹேமா விளக்கமான பதில்களை அளித்துள்ளார். மேலும், முல்லை வேடத்தில் வேறு ஒருவர் நடிக்க இருப்பதாக வந்த கேள்விக்கு அப்படி இல்லை என்றும் காவ்யா தான் முல்லையாக தொடருவார் என்றும் கூறியுள்ளார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

மற்றொருவர் ஹேமா புது சீரியலில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக மற்ற சேனல்களில் வரும் தகவல்களை பற்றி கேட்டார். அதற்கு ஹேமா அதெல்லாம் வதந்திகள் தான் என்றும், இப்போதைக்கு எந்த புது சீரியலிலும் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். இவர் தனது ரசிகர்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் அளித்து பதில்கள் அளித்து வருவதால் ஹேமாவிற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!