காதலில் விழுந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
காதலில் விழுந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
காதலில் விழுந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
காதலில் விழுந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் ஜோடியாக நடித்து பின் விலகிய சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா காதலர்கள் போல வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

சரவண விக்ரம் & விஜே தீபிகா:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கிறது. அதில் ஒரு குடும்ப சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியல் தமிழ் மட்டுமில்லாமல் இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி ஒரு கதைக்களம் கொண்ட சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் கடைக்குட்டியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சரவண விக்ரம். சந்தோசமாக இருந்த குடும்பத்தில் இவருடைய காதலால் தான் பிளவு ஏற்பட்டது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முதலில் விஜே தீபிகா நடித்து வந்தார்.

இருவரும் காதல் காட்சிகளில் எதார்த்தமாக நடிப்பதை பார்த்து பலருக்கு பிடித்து போனது. மேலும் இருவரும் சீரியலை தவிர வெளி இடங்களிலும் ஜோடியாக சுற்ற தொடங்கினார்கள். அதனால் இருவரும் நிஜத்திலும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனால் நாங்கள் நண்பர்கள் என அவர்கள் பல முறை சொல்லி இருக்கின்றனர். இந்நிலையில் விஜே தீபிகா சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

ஆனாலும் இருவரும் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது விஜே தீபிகா தன்னுடைய முகப்பரு பிரச்சனையை சரி செய்து செம அழகாக இருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வாய்ப்புகளும் இன்னும் வரவில்லை என இன்ஸ்டா பக்கத்தில் லைவில் தனது ரசிகர்களுக்கு பதில் அளித்தார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இருவரும் காதலர்கள் போலவே இருப்பதால் ரசிகர்களுக்கு மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தீபிகா அந்த புகைப்படத்தின் மேலே Timon and Pumba என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அதனால் இருவரும் நட்பாக தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!