தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 29,30ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

கனமழை:

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் வெப்பச்சலனம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பொழிவும் இருக்கும். அதே போல இந்த வருடமும் கோடை வெயில் சுட்டெரித்தது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வந்தது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Accenture நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்…!

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும், நாளையும் குமரிக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!