அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

கடந்த வாரம் முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் , அடுத்து வரும் 3 நாட்களுக்கும் தமிழகம் முழுவதும் கனமழை தொடரும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்‌

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

12.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

13.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தார்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14.09.2022 முதல்‌ 16.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Exams Daily Mobile App Download
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

12.09.2022: மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

செப்டம்பர் 22 க்குப் பிறகு இந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

13.09.2022: மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

14.09.2022 மற்றும்‌ 15.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்‌ தமிழக கடலோரப்பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!