HCL நிறுவனத்தில் IT நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்பம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள்!

0
HCL நிறுவனத்தில் IT நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு - தகுதி, விண்ணப்பம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள்!
HCL நிறுவனத்தில் IT நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு - தகுதி, விண்ணப்பம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள்!
HCL நிறுவனத்தில் IT நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்பம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள்!

HCL டெக்னாலஜிஸ் தனது பெங்களூர் மற்றும் சென்னை நிறுவனங்களுக்கு அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பணிக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT நிபுணர் பணி வாய்ப்பு:

1976 இல் தொடங்கப்பட்ட HCL டெக்னாலஜிஸ், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு IT சேவைகளை வழங்கும் முன்னணி IT சேவை நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. HCL நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 187,000+ க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டுள்ளது. தற்போது, HCL டெக்னாலஜிஸ் தனது பெங்களூர் மற்றும் சென்னை இடங்களுக்கு அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பணியமர்த்த உள்ளது. கோவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் ஐடி சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்துவதில் ஈடுபட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முதல்வர் ஹாப்பி நியூஸ்!

டெல்லி NCR-ஐ தலைமையிடமாகக் கொண்ட IT மேஜர், HLC டெக் நிறுவனம் தற்போது அனுபவம் வாய்ந்த முன்னணி பொறியாளர் பணிக்கு வாய்ப்புகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ள IT நிபுணர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் கருத்தியல் பொறியியல் வடிவமைப்புகளில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பிளாஸ்டிக், உலோகத் தாள்கள் பற்றிய சிறந்த அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.

TCS அறிமுகம் செய்த சூப்பர் திட்டம் – இலவச டிஜிட்டல் சான்றிதழ்!

  • உயர்நிலை மற்றும் குறைந்த-நிலை வடிவமைப்பு மற்றும் ஆவணங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
  • கல்வித் தேவையை பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

HCL டெக்னாலஜிஸில் சமீபத்திய வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள கேரியர் பக்கத்திற்கு சென்று பார்வையிட வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களை புதிதாக பதிவு செய்து கணக்கு ஒன்றை உருவாக்க வேண்டும். அல்லது தங்கள் பழைய கணக்குகளில் உள்நுழைய வேண்டும். HCL இல் IT நிபுணர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!