‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரனுக்கு வழங்கப்பட்ட விருது – நண்பர் விவேக் பிரசன்னாவுடன் சந்திப்பு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் குமரனுக்கு வழங்கப்பட்ட விருது - நண்பர் விவேக் பிரசன்னாவுடன் சந்திப்பு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் குமரனுக்கு வழங்கப்பட்ட விருது - நண்பர் விவேக் பிரசன்னாவுடன் சந்திப்பு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரனுக்கு வழங்கப்பட்ட விருது – நண்பர் விவேக் பிரசன்னாவுடன் சந்திப்பு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரன் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தனது நண்பரும் திரைப்பட நடிகருமான விவேக் பிரசன்னாவை சந்திக்க, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் குமரன்

மக்களின் மனம் கவர்ந்த சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இல் கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன். நனட வடிவமைப்பாளரும், திரைப்பட நடிகருமான குமரன் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்த ஒரு தொடரிலேயே ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நடிகர் குமரனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

‘செம்பருத்தி’ ஷபானாவுடனான திருமணத்திற்கு பின்பு ஆர்யன் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தற்போது தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக முயற்சித்து வரும் நடிகர் குமரன், அவ்வப்போது சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தையும் பெற்று வருகிறார். அந்த வகையில் இவருக்கு, 2021ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது, 𝗙𝗔𝗕 𝗦𝗧𝗔𝗥𝗦 என்ற தனியார் மீடியா துறையில் இருந்து கிடைத்திருக்கும் நிலையில் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் வைத்து தனது நண்பரும் திரைப்பட நடிகருமான விவேக் பிரசன்னாவை சந்தித்திருக்கிறார் நடிகர் குமரன்.

பாரதி, கண்ணம்மா வீட்டிற்குள் புகுந்த மழைநீர் – மேக்கிங் வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

தொடர்ந்து அவ்விழாவில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் குமரன், ‘எதிர்பாரதவிதமாக நண்பர் விவேக் பிரசன்னாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என உண்மையாகவே ஆசைப்படும் நல்ல மனிதர். விரைவில் இவருடன் சேர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என காத்திருக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!