மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை.. வைப்புத்தொகை மீண்டும் ரிட்டர்ன் – சூப்பர் அறிவிப்பு!

0
மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை.. வைப்புத்தொகை மீண்டும் ரிட்டர்ன் - சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் மிகவும் நெரிசல் நிறைந்த இடம் தலைநகர் சென்னை தான். இதனால் அங்கு போக்குவரத்திற்கு மெட்ரோ, புறநகர் ரயில்வே, பேருந்துகள் என பலவழிகள் கடைபிடிக்கப்படுகிறது. இதில் மிகவும் எளிதானதாகவும், தற்போது அதிகம் பயன்படக்கூடியதுமாக இருப்பது மெட்ரோ தான்.

இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றாற் போல மெட்ரோ நிர்வாகமும் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் அல்லது சலுகைகள் என பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN TRB GT/ BRTE தேர்வு முடிவுகள் 2024 – சற்றுமுன் வெளியீடு!

வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி நாம் ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் மெட்ரோவில் எங்கு வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணங்களை மேற்கொள்ளலாம். அதன் பின்னர் ரூ.150 செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை நம்மிடம் தரப்படும். இந்த அறிவிப்பு தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!