மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முதல்வர் ஹாப்பி நியூஸ்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - முதல்வர் ஹாப்பி நியூஸ்!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - முதல்வர் ஹாப்பி நியூஸ்!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முதல்வர் ஹாப்பி நியூஸ்!

ஆந்திர மாநிலத்தில் சம்பள மறுவரையறை ஆணைய நடைமுறைகள் குறித்து அம்மாநில முதல்வர் முக்கிய அறிவுப்புகளை வெளியிடுவார் என்று தகவகல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சம்பள உயர்வு:

மத்திய அரசு பணியாளர்களுக்கு அண்மையில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தி தற்போது 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இந்த நிலையில் ஆந்திராவில் அரசு ஊழியர்கள் சம்பள மறுவரையறை ஆணையம் அமைத்து ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

TCS அறிமுகம் செய்த சூப்பர் திட்டம் – இலவச டிஜிட்டல் சான்றிதழ்!

பல மாதங்களாக இந்த கோரிக்கை நீடித்த நிலையில் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தற்போது டிசம்பர் 7ம் தேதி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் தலைமை செயலாளர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்து வருகிறது. அதனை தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடுத்த 10 நாட்களில் சம்பள மறுவரையறை ஆணையம் தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதனையடுத்து மாநில அரசு ஊழியர்களுடன் அரசு ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அகவிலைப்படி நிலுவைத்தொகை, சிபிஎஸ் ரத்து, அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஒப்பந்த ஊழியர்களை வரைமுறைப்படுத்துதல், பணி நியமனம், சம்பள மறுவரையறை ஆணையம் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதானல் விரைவில் சம்பள மறுவரையறை ஆணையம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here