TCS அறிமுகம் செய்த சூப்பர் திட்டம் – இலவச டிஜிட்டல் சான்றிதழ்!

0
TCS அறிமுகம் செய்த சூப்பர் திட்டம் - இலவச டிஜிட்டல் சான்றிதழ்!
TCS அறிமுகம் செய்த சூப்பர் திட்டம் - இலவச டிஜிட்டல் சான்றிதழ்!
TCS அறிமுகம் செய்த சூப்பர் திட்டம் – இலவச டிஜிட்டல் சான்றிதழ்!

ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ‘கேரியர் எட்ஜ்’ என்ற இலவச 15 நாள் டிஜிட்டல் படிப்பை வழங்கி, அதற்கான சான்றிதழ்களையும் வழங்குகிறது. அதனை பற்றிய முக்கிய விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரியர் எட்ஜ் திட்டம்:

நாட்டின் முக்கிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ‘கேரியர் எட்ஜ்’ என்ற 15 நாட்கள் இலவச டிஜிட்டல் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. “கரியர் எட்ஜ் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது, இது ஆசிரியர்களின் மேம்பாட்டை வலியுறுத்துகிறது மற்றும் பாரம்பரிய கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதை வலியுறுத்துகிறது” என்று TCS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் படிக்கும் ஒருவர் தனது தனிப்பட்ட வேகத்தில் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்கலாம்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இருப்பினும், பயனர்கள் டிஜிட்டல் கலந்துரையாடல் முறைக்கான அணுகலை பெறுவார்கள். அதில், அவர்கள் தங்கள் பாடம் தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பாடநெறிக்கு குறைந்தபட்சம் தினசரி 1முதல் 2 மணி நேரம் தொடர்ந்து 15 நாட்களுக்கு தேவைப்படுகிறது. இந்தப் பாடநெறி பயனர்கள் டிஜிட்டல் உலகத்திற்கான புதுமையான கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்துவதற்கு உதவும் வகையிலும், பாடநெறி தொலைதூரத்தில் மதிப்பீடுகளை நடத்துவதற்கான அத்தியாவசிய நுட்பங்களையும் உள்ளடக்கியது. ஆன்லைன் பாடத்திட்டத்தை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் மற்றும் எந்த சாதனத்திலிருந்தும் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அனைத்து மதிப்பீடுகளும் ஆன்லைனில் முடிக்கப்பட வேண்டும் என்பதால் விண்ணப்பதாரர்கள் தேர்வுகளுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. பயனர்கள் 14 தொகுதிகள் மற்றும் இறுதி தேர்வுகளை முடித்ததும் சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழைப் பெறுவார்கள். 15 நாட்களில் உங்களால் படிப்பை முடிக்க முடியாவிட்டாலும், அனைத்து தொகுதிகளும் பயனர்களுக்கு கிடைக்கும். பயனர்கள் தங்கள் சொந்த வேகத்தில் அவற்றை படித்து முடித்துக் கொள்ளலாம். இந்த பாட நெறிகள் அனைத்தும் 5 செப்டம்பர் 2024 வரை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!