வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ உங்க பணத்துக்கு ஆபத்து – உடனே தெரிஞ்சுக்கோங்க!

0
வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ உங்க பணத்துக்கு ஆபத்து - உடனே தெரிஞ்சுக்கோங்க!
வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ உங்க பணத்துக்கு ஆபத்து - உடனே தெரிஞ்சுக்கோங்க!
வங்கியில் Deposit செய்துள்ளீர்களா? அப்போ உங்க பணத்துக்கு ஆபத்து – உடனே தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் தற்போது இணையவழி பண பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் தங்கள் கைகளில் உள்ள மொபைல் போன் வழியாக எந்த நேரத்திலும் பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் இணையவழி பண மோசடிகளும் நடந்து வருகிறது. தற்போது புதிய வகை தொழில்நுட்ப வைரஸ் மூலம் பணம் கையாடல் நடைபெற்று வருகிறது.

‘சோவா’ வைரஸ்:

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மக்கள் இணையத்தின் உதவியுடன் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் ஆன்லைன் பண பரிமாற்றம். முன்பெல்லாம் நாம் பணத்தை டெபாசிட் செய்யவும், அதனை திரும்ப பெறவும் வங்கியை நாடுவோம். நீண்ட நேரம் வரிசையின் நின்று வங்கி சார்ந்த வேலைகளை முடிந்து வந்தோம். தற்போது வங்கி வேலைகள் மற்றும் பண பரிமாற்றங்கள் மிகவும் எளிமையாகி விட்டது. வங்கிகள் 24 மணி நேரமும் ஆன்லைன் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது.

அந்தந்த வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றத்தை செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் இணைய வழியில் மோசடி செய்யும் நபர்கள் வங்கி கணக்கு எண், கடவுச்சொல் போன்றவைகளை கைப்பற்றி வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் கையாடல் செய்து விடுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் ‘சோவா’ என்ற வைரஸ் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வைரஸானது யூசர் நேம், பாஸ்வேர்டு மற்றும் வாடிக்கையாளர்களின் வங்கி சார்ந்த அனைத்து விவரங்களையும் எளிதாக திருட கூடியது என்று செர்ட்-இன் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு திடீரென அறிவிக்கப்பட்ட விடுமுறை – மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே இந்த வைரஸ் அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பண மோசடிகள் நடப்பதற்கு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிற்குள்ளும் இந்த வைரஸை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த வைரஸ், குரோம், அமேசான் பிரபல லோகோவை காட்டி மக்களை பதிவிறக்கம் செய்ய வைக்கிறது. பிறகு உங்களின் ஆன்ட்ராய்டு போனில் உள்ள அனைத்து விவரங்களையும் ‘சோவா’ வைரஸ் தனது கட்டுப்பாட்டில் உள்ள சர்வருக்கு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ‘சோவா’ வைரஸ், மொபைல் பேங்கிங் செயலிகள், பணம் செலுத்தும் செயலிகள், கிரிப்டோகரன்சி செயலிகள் போன்ற செயலிகளை குறி வைத்துள்ளது. அதனால் இணையவழி பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!