அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் – ரசிகர்கள் வருத்தம்!

0
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் - ரசிகர்கள் வருத்தம்!
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் - ரசிகர்கள் வருத்தம்!
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங் – ரசிகர்கள் வருத்தம்!

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது “ட்விட்டர்” பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் IPL போன்ற இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் தற்போது அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் பதிவு:

ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட், ஒரு நாள், மற்றும் T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 417, ஒருநாள் போட்டிகளில் 269, டி20 போட்டிகளில் 25 என்று மொத்தம் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கனா ஹெராத் ஆகியோருக்குப் பின் ஒரு ஆஃப்-ஸ்பின்னர் ஆக நான்காவது அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 34% அகவிலைப்படி அதிகரிப்பு!

1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிங் தனது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச (ODI) போட்டிகளில் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டில், முன்னணி லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே காயம் அடைந்ததால், இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பார்டர்-கவாஸ்கர் டிராபி அணியில் சேர்ப்பதற்காக அழைத்ததை அடுத்து ஹர்பஜனின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் உயிர் பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரின் வெற்றியில் ஹர்பஜன் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றதன் மூலம் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் இரவு ஊரடங்கு? இன்று வெளியாகும் அறிவிப்பு!

ஹர்பஜன் சிங் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2009 இல் பெற்றார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஆடியிருக்கிறார். 13 ஐபிஎல் சீசன்களில் ஆடியுள்ள ஹர்பஜன் சிங் 163 மேட்ச்களில் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது சிறந்த பந்து வீச்சு 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் விக்கெட்டுகள் எண்ணிக்கையில் சிங்கை மிஞ்சினார். 2021 டிசம்பர் 24ம் தேதியாகிய இன்று கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!