WhatsApp பயனாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செய்திகளை எடிட் செய்யும் புதிய வசதி அறிமுகம்!

0
WhatsApp பயனாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - செய்திகளை எடிட் செய்யும் புதிய வசதி அறிமுகம்!
WhatsApp பயனாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - செய்திகளை எடிட் செய்யும் புதிய வசதி அறிமுகம்!
WhatsApp பயனாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செய்திகளை எடிட் செய்யும் புதிய வசதி அறிமுகம்!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயனாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் பல முக்கிய அம்சங்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

வாட்ஸ்ஆப் புதிய வசதி:

தற்போது மக்களின் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் நடைபெறத் தொடங்கிவிட்டது. குறிப்பாக பட்டி தொட்டியில் இருக்கும் மக்கள் கூட வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அது ஒரு தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியாக மட்டும் இல்லாமல் பண பரிவர்தனை, வீடியோ கால் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அனைத்து விதமான மக்களும் பயன்படுத்தும் அளவிற்கு சுலபமாக இருப்பதால் பலர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மேலும் செயல்முறைகளை சுலபமாக்க புது புது அம்சங்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்ஆப் பயனாளர்களின் ஆலோசனைப்படி வாட்ஸ்ஆப் அடுத்தகட்டமாக நிலைத்தகவலில் ஏதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை பதிவு செய்யும் போது அதற்கான முன்னோட்டத்தை காணும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – உடனே விண்ணப்பிக்கவும்!

ஆனால் தற்போது வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய தகவல்களை எடிட் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலமாக எதாவது செய்தி பிழையாக அனுப்பிவிட்டால் அதை அப்படியே நீக்காமல் எடிட் மூலம் சரி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சோதனை முடிந்து அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!