தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி கடைகளில் தக்காளி விற்பனை!
தமிழகத்தில் வெளிச்சந்தைகளில் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
தக்காளி விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதனால் மக்கள் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அதிர்ச்சியை அளித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மக்கள் மீண்டு வந்தாலும் பொருளாதார சரிவில் இருந்து மீளவில்லை என்று தான் கூற வேண்டும். குறிப்பாக உணவு பொருட்களின் விலையேற்றம் மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாம் அன்றாட சமையலுக்கு உபயோகப்படுத்தும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது
Exams Daily Mobile App Download
இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளியின் வரத்து குறைவே விலை குறைவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தக்காளி செடியிலேயே சேதமடைந்தது வீணாகியது இதனால் தக்காளியின் விலை 150 எட்டியது. அதே போல கடந்த மாதம் டெல்டா பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் தற்போது தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு கூட்டுறவு துறையில் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்துத்துவா அமைப்பினர் கிளப்பிய புதிய சர்ச்சை – 144 தடை உத்தரவு அமல்!
தக்காளியின் விலை வெளி சந்தைகளில் கட்டுக்குள் வரும் வரை கூட்டுறவுத்துறை நடைபெற்று வரும் தக்காளி விற்பனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நிலவரப்படி 18 மெட்ரிக் டன் தக்காளி ரூ.15 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கு மத்தியில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்