Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!

Reliance Jio நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ரூ. 249 முதல் ரூ. 2,879 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Reliance Jio:

நாடு முழுவதும் 40.5 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டு விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ. 249 முதல் ரூ. 2,879 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்களை பார்க்கலாம். முதலில் 23 நாட்களுக்கு செல்லுபடியாகும்படியான ரூ. 249 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு 64kbps வேகத்தை வழங்கியிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இத்துடன், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற சேவைகளையும் வழங்குகிறது. அடுத்ததாக ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் படியான ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதிலும் வரம்பற்ற கால் அழைப்பு, 100SMS போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 56 நாட்கள் செல்லுபடியாகும் படியான ரூ. 533 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் அறிமுகமாகியிருக்கிறது. இதிலும், வரம்பற்ற கால் அழைப்பு, 100SMS போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு

மேலும், ரூ.719 ரீசார்ஜ் திட்டத்திற்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் 2ஜிபி தினசரி டேட்டா, 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதனையடுத்து, ரூ.799 ரீசார்ஜ் திட்டத்தில் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் கூடுதலாக இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் வழங்கப்படுகிறது. மேலும், ரூ.1,066 ரீசார்ஜ் திட்டத்திற்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் 2ஜிபி தினசரி டேட்டா, 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வசதி வழங்கப்படுகிறது. இதனையடுத்து, ஒரு ஆண்டிற்கு செல்லுபடியாகும் ரூ. 2,879 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி தினசரி டேட்டா, 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!