மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?

0
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 6 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்னும் பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ்

இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனில் 6 போட்டிகளில் 6 தோல்விகள் அடைந்து மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வகித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 சீசனில் தொடர்ச்சியாக ஆறாவது போட்டியில் தோல்வியடைந்தது ஒரு வெற்றி கூட பெறாத ஒரே அணியாக உள்ளது. கடைசியாக பிரபோர்ன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான அணியை வீழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் 5 போட்டிகளை மிக நெருக்கமான வித்தியாசத்தில் தான் இழந்துள்ளது. இந்த அனைத்து ஆட்டத்திலும் MI அணி ஒரு வழக்கமான பிழைகளை செய்துள்ளனர். அதாவது விளையாடும் பதினொருவரைத் தேர்ந்தெடுப்பதிலும், விளையாட்டிலும் அணிக்கான ஒரு முழுமை கிடைக்கவில்லை. இப்போது கிட்டத்தட்ட லீக் சுற்றில் இருந்து வெளியேறக்கூடிய நிலையில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா என்பதே இப்போது அனைவரின் மனதிலும் உள்ள ஒரு கேள்வியாகும்.

இதற்கான எளிதான பதில் என்னவென்றால், அவர்கள் இப்போது மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே ஆப்களுக்கு தகுதி பெற முடியும். ஆனால் முதலில் அவர்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்தாக வேண்டும். பின்னர் அவர்கள் 16 புள்ளிகளுடன் இந்த சீசனை முடிக்க வேண்டும். கடந்த 2011 ஐபிஎல்லின் போது, நான்காவது இடத்தில் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்ற அணி 16 புள்ளிகளுடன் இருந்தது. அந்த நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களை தவறவிட்டது.

IPL 2022: CSK ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே ஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான 3 காரணங்கள் இதோ!

இந்த முறை அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் 2011 புள்ளிகள் அட்டவணையின் படி, ஒரு அணி 4 வது இடத்தைப் பெற 16 புள்ளிகள் தேவைப்படும். எனவே, இதைப் பின்பற்றி முதல் நான்கு இடங்களுக்குள் வர 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பயணத்தை தொடர ஒரு நம்பமுடியாத அதிசயத்தை செய்தாக வேண்டும். இப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தற்போதைய சூழ்நிலையிலிருந்து தகுதி பெறுவதற்கான எதிர்பார்ப்பு சாத்தியமற்றது. இருப்பினும் ஏதேனும் அதிசயம் நிகழ்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!