சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு - IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு - IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்தே சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தீபக் சஹாருக்கு தற்போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்:

அதிவேகப் பந்து வீச்சாளரான தீபக் சஹாரை சிஎஸ்கே அணி, ஐபிஎல் ஏலத்தில் ரூபாய் 14 கோடிக்கு தேர்வு செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்தே சிஎஸ்கே அணிக்காக தீபக் சஹார் விளையாடிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 52 ஆட்டங்கள் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாடியிருக்கிறார். இந்த 58 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்கு குவித்து கொடுத்த பெருமையை சேர்த்துள்ளார். அதிலும் இந்த 58 விக்கெட்டுகளில் நாற்பத்தி இரண்டு விக்கெட்டுகள் பவர்ப்ளே ஓவர்களில் எடுத்துள்ளதால் முக்கிய வீரராக கருதப்படுகிறார்.

IPL 2022: CSK ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே ஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான 3 காரணங்கள் இதோ!

கடைசியாக இவர் விளையாடிய 3 ஒருநாள் ஆட்டங்களில் அரைசதத்தை குவித்தார். மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தின்போது தீபக் சஹாரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சிஎஸ்கே அணியுடன் ஐபிஎல் தொடரில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – IPL 2022 தொடரில் இருந்து விலகிய தீபக் சாஹர்!

காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்த தீபக் சஹாருக்கு தற்போது முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சஹார் கலந்து கொள்ளமாட்டார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தீபக் சஹார் விரைவில் குணமாக வேண்டும் என வேண்டிக்கொண்டனர். இந்நிலையில் தீபக் சஹார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். காயம் காரணமாக என்னால் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. நான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டுமென மிகவும் ஆசைப்பட்டேன். கண்டிப்பாக அடுத்த ஆண்டு உங்களுக்காக சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என கூறியுள்ளாr.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here