மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4% அகவிலைப்படி சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4% அகவிலைப்படி சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் 4% வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால், சம்பள உயர்வை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எப்போதும், வருடத்திற்கு இரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது, ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முறையும் என வருடத்திற்கு இரு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த கொரோனா காலகட்டத்தின் போதே மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு 31% ஆக இருந்தது.

Exams Daily Mobile App Download

பின்பு, மீண்டும் 3% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34% ஆக உள்ளது. இதனிடையே, அடுத்த சம்பள உயர்வை எதிர்பார்த்து மத்திய அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், DA உயர்வையும் எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும், ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மதிப்பீட்டை பொறுத்து தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயருகிறது.

அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டிஏ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 4% வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதாவது, 4% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 38%ஆக அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கும். மேலும், அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ 18,000 எனில் மாதத்திற்கு ரூ.6840 அளவிற்கு டிஏ உயர்வு கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!