வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!

0
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வங்கிகளில் சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான UCO வங்கி சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் உள்ள சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பயனடைவார்கள்.

வட்டி உயர்வு

இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தொழில் துறைகளும் பாதிப்படைந்து நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து அத்துடன் சேமிப்பையும் இழந்தனர். அதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அதனால் தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர். இதில் குறிப்பாக வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டத்தில் சேமிக்க தொடங்கினர்.

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!

மேலும் தற்போது பெரும்பாலான வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக UCO வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குகள் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வால் சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சேமிப்புக் கணக்குகளை விட சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சேமிப்பு கணக்குகளில் ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 2.60% வட்டியும் அதற்கும் மேற்பட்ட டெபாசிட்களுக்கு 2.75% வட்டியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

மேலும் யூகோ வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2 கோடி வரையிலான முதலீடுகளுக்கு வட்டி விகிதம் 6.60% உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 6.40% வட்டி விகிதம் வழங்கப்பட்டது. இதில் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.55% இருந்து 6.80% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் 1 ஆண்டுக்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இந்த வட்டி விகிதங்களை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக UCO வங்கி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!