ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி ஆதார் சேவைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீடு தேடி ஆதார் சேவைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீடு தேடி ஆதார் சேவைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி ஆதார் சேவைகள்!

நாடு முழுவதும் அதாவது சிறு கிராமங்கள் முதல் பெரு நகரங்களின் அனைத்து பகுதிகளுக்கும் ஆதார் அப்டேட் சேவையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஒன்றிய அரசு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது. அதாவது ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் இனி ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார் சேவை:

இன்றைய காலகட்டத்தில், ஆதார் கார்டு அனைத்து அரசு சேவைகள், சலுகை திட்டங்கள் பெறுவதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த கார்டில் ஏதேனும் தகவல்கள் சரியாக இல்லை என்றால் பல இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆதார் எண் தரவுகளை அப்டேட் செய்ய அரசு ஏற்கனவே பல ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனாலும் இந்தத் தேவையை இன்னும் எளிதாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதமாகப் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இதன் அடிப்படையில் வீடுகளுக்கே சென்று ஆதார் அட்டையில் இருக்கும் திருத்தங்கள் சரி செய்து தரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வெளியான அறிக்கையின்படி, UIDAI தற்போது 48,000 இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தபால்காரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பயிற்சிக்குப் பிறகு, தபால்காரர்கள் பொதுமக்கள் வீட்டிற்கே வந்து ஆதார் சேவைகளை வழங்குவார்கள். தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்களைச் சென்று தொடர்பு கொள்வதற்கும், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது, ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு ஆதார் அட்டை என பல சேவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு 50 நாட்களில் தயாராவது எப்படி? ஈஸி டிப்ஸ் இதோ!

மேலும் 1.5 லட்சம் அஞ்சல் அலுவலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தபால்காரர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லெட் அடிப்படையிலான ஆதார் கிட் உள்ளிட்ட பொருத்தமான டிஜிட்டல் உபகரணங்களை UIDAI வழங்கும் என சில அறிக்கைகள் கூறுகிறது. இது தவிர, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொது சேவை மையத்தில் பணிபுரியும் சுமார் 13,000 பணியாளர்களும் இந்த சேவைக்காக அங்கீகரிக்கப்படுவார்கள். இந்த புதிய சேவைகள் மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அவர்கள் தகவல்களை அப்டேட் பண்ணலாம், மேலும் குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டையை பதிவு செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here