TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு 50 நாட்களில் தயாராவது எப்படி? ஈஸி டிப்ஸ் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு 50 நாட்களில் தயாராவது எப்படி? ஈஸி டிப்ஸ் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு 50 நாட்களில் தயாராவது எப்படி? ஈஸி டிப்ஸ் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு 50 நாட்களில் தயாராவது எப்படி? ஈஸி டிப்ஸ் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஜூலை மாதம் நடத்த இருக்கும் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் அடுத்த 50 நாட்களுக்குள் எப்படி படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம் என்பது குறித்த சில வழிகாட்டுதல்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

குரூப் 4 தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வுகள் நடைபெற இருக்கிறது. வெறும் 7382 காலிப்பணியிடங்களை கொண்டிருக்கும் இந்த பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும் என்பதால், இத்தேர்வை எழுதுவதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இப்படி இருக்க குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், இன்னும் 50 நாட்களில் படித்து தேர்வில் வெற்றி பெறுவதற்காக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

TNPSC குரூப் 4 தேர்வு எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டது. இந்த எழுத்துத் தேர்வின் முதல் பகுதியான தமிழ் மொழித்தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். தொடர்ந்து பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள் மற்றும் 25 திறனறி தேர்வுகள் கொண்ட 100 கேள்விகள் கேட்கப்படும். இந்த பொது அறிவு பிரிவில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்படும்.

இப்போது வெறும் 50 நாட்களில் தேர்வுக்கு தயாராக விரும்புபவர்கள் தினமும் 4 மணிநேரத்தை தமிழ் பகுதிக்கும், 1 மணி நேரத்தை கணிதப் பகுதிக்கும் செலவிட வேண்டும். தொடர்ந்து 4 முதல் 6 மணி நேரத்தை பொது அறிவு பகுதிக்கு ஒதுக்கலாம். இப்போது தமிழில் கேட்கப்படும் 100 வினாக்களில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை நன்றாக படிக்க வேண்டும். இதில் குறிப்பாக செய்யுள், உரைநடை, இலக்கணம், இலக்கியம் உள்ளிட்ட பாடங்களில் கவனம் செலுத்தினால் போதுமானது. புக் பேக் வினாக்களிலும் கவனம் அவசியம்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? வலுக்கும் கோரிக்கை!

மறுபக்கத்தில், 11 மற்றும் 12ம் வகுப்பு பாடபுத்தகங்களை லேசாக திருப்பி பார்த்தால் போதுமானதாகும். தொடர்ந்து கணித பகுதி வினாக்களில் லாபம், நஷ்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தினால் 25 வினாக்களுக்கும் சரியாக பதில் அளிக்க முடியும். இந்த கணிதப்பாட பிரிவுக்கு பயிற்சி செய்துக் கொள்வது நல்லது. அடுத்ததாக பொது அறிவு பிரிவில் கேட்கப்படும் 75 வினாக்களில் 60 முதல் 65 வரையுள்ள வினாக்களுக்கு சரியாக விடையளிக்க அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் பாடங்களில் அதிக கவனம் அவசியம். மேலும் நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படித்தால் போதுமானது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!