அரிசி முதல் இறைச்சி விலை வரை GST யில் வரவிருக்கும் மாற்றங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
அரிசி முதல் இறைச்சி விலை வரை GST யில் வரவிருக்கும் மாற்றங்கள் - முழு விவரங்கள் இதோ!
அரிசி முதல் இறைச்சி விலை வரை GST யில் வரவிருக்கும் மாற்றங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில் ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றங்கள் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி:

இந்தியாவில் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளது. இந்த வரி ஒவ்வொரு மதிப்பு கூட்டலுக்கும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி என்பது ஒரு உள்நாட்டு மறைமுக வரியாக உள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சன் டிவி ரோஜா சீரியலுக்கு மீண்டும் திரும்பும் சிபு சூர்யன்? வைரலாகும் பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!

இதில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வர இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை விரைவில் மத்திய நிதியமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தற்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால்
எந்தெந்த பொருட்களில் விலை அதிகரிக்கும் என்று பார்ப்போம்.

  1. ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பிராண்ட் இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  2. இதனை தொடர்ந்து முத்திரையில்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை காய்கறிகள், கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  3. மேலும் அட்லஸ் வரைபடம், விளக்கப்படங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  4. அடுத்ததாக ஹோட்டல்களில் ரூ.1000க்கும் குறைவான வாடகை உள்ள அறைகளுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  5. ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரை பந்தயம் உள்ளிட்டவைகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here