TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

0
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு? - வெளியான முக்கிய தகவல்!
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - வெளியான முக்கிய தகவல்!
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

TNPSC Group 4 பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 4  Result 2022 தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் குரூப் 4 பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை 24ம் தேதி அன்று TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இதற்கான காலியிடங்கள் 7381 ஆக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 10117 ஆகா உயர்த்தப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் நிறைவடைந்தும், தேர்வு முடிவுகள் வெளியாகாததால், தேர்வர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால், தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதற்கான காரணத்தை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!

அதாவது, இந்த முறை குரூப் 4 தேர்வை 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படுவதாக TNPSC ஆணையம் தெரிவித்தது.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்து, இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று TNPSC Group 4 2022 தேர்வுக்கான முடிவுகள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியாகி உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை 2022 எவ்வாறு சரிபார்க்கலாம்?
  • முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப் பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு (latest result ) பகுதியைக் கண்டறியவும்.
  • தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
  • சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
  • இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்காக அச்சு எடுக்கவும்.

TNPSC Group 4 Result Out – Click Here

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!