5 ஆண்டுகள் பணி புரியும் நபரா நீங்கள்? – இத பத்தி உங்களுக்கு தெரியுமா!

0
5 ஆண்டுகள் பணி புரியும் நபரா நீங்கள்? - இத பத்தி உங்களுக்கு தெரியுமா!

ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றும் நபர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் தொகை குறித்த விபரங்கள் பற்றி இப்பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஜுவிட்டி தொகை:

மத்திய மற்றும் மாநில அரசுகள் தனது ஊழியர்களுக்கு வழங்கி வரும் பலன்களைப் போலவே தனியார் நிறுவனங்களும் தனது ஊழியர்களுக்கான சில பலன்களை வழங்க வேண்டும். அதன்படி ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரியும் நபருக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது தொழிலாளர் விதிகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கொடை ஆனது நிறுவனம் தனது ஊழியர்களின் நீண்ட கால விசுவாசம் மற்றும் சேவைகளை பாராட்டும் வகையில் வழங்கப்படும் ஒரு வெகுமதியாக உள்ளது. முழுவதுமாக ஐந்து ஆண்டுகள் பணிபுரியும் நபர் மட்டுமே பணிக்கொடை தொகையை பெற தகுதியுடையவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

சைனிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.65,554/- || உடனே விண்ணப்பியுங்கள்!

ஆனால் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் பணியாற்றி இருந்தாலும் அது முழுமையானதாக கருதி அவருக்கு பணிக்கொடை பெறுவதற்கான தகுதி வழங்கப்படுகிறது. ஆனால் நான்காண்டுகள் மற்றும் எட்டு மாதங்களுக்கு குறைவாக பணியாற்றிய நபர்களுக்கு அவரின் பணி காலம் வெறும் நான்கு ஆண்டுகளாக மட்டுமே கருதப்படும். இவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படாது. அதேநேரம் பணிக்கொடை சட்டம் 1972 இன் படி பணியாற்றும் நபர் மரணமடைந்தாலோ அல்லது ஊனமுற்றாலோ மீண்டும் வேலை செய்ய முடியாமல் போனாலும் அவருக்கு ஐந்தாண்டுகள் பணிக்கொடை காலம் விதி பொருந்தாது. இவர்களின் பணிக்கொடை தொகையை நாமினி அல்லது அவர்கள் சார்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!