கொரோனாவை ஒழிக்க ரூ.6000 கோடி நிதி அளித்த Google சுந்தர் பிச்சை..!

0
கொரோனாவை ஒழிக்க ரூ.6000 கோடி நிதி அளித்த Google சுந்தர் பிச்சை..!
கொரோனாவை ஒழிக்க ரூ.6000 கோடி நிதி அளித்த Google சுந்தர் பிச்சை..!

கொரோனாவை ஒழிக்க ரூ.6000 கோடி நிதி அளித்த Google சுந்தர் பிச்சை..!

உலகமெங்கும் கொரோனாவால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் அவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொது மக்களிடம் நிதி வழங்கும்படி அரசு கேட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு உதவ ஒன்றிணைந்து உதவி செய்து வருகின்றனர்.

நிதி உதவி

அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்து கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது சுந்தர் பிச்சை அவர்கள் தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர் நிதியை சுகாதார அமைப்புகள், சிறிய வணிகங்கள் மற்றும் COVID-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் விடுமுறை நீட்டிப்பு !!!!

இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்கானது என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 340 மில்லியன் மதிப்புள்ள இலவச விளம்பரங்களை ஆல்பாபெட் வழங்குகிறது என்றும் இந்த சிக்கலான காலங்களில் தங்கள் வணிகத்தை உறுதிப்படுத்த கூகிள் நெட்வொர்க் என்றும் ஒரு பாலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, ஆல்பாபெட் நிறுவனம் 20 மில்லியன் டாலர் தருவதாக உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க கூகிள் கிளவுட் நிறுவனத்தை எப்போதும் பயன்படுத்தலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!

மேலும், ஆல்பாபெட் தனது நன்கொடைகளில் 10,000 டாலர்கள் வரை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் நிறுவனங்களுக்கும் நிதியுதவி செய்யவுள்ளது. தற்போது சுகாதார வழங்குநர்கள் எதிர்கொண்டுள்ள முகமூடிகள் பற்றாக்குறையை சமாளிக்க முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிக்க தனது பார்ட்னர்களுடன் இணைந்து செயலாற்ற திட்டமிட்டுள்ளது. மேலும் ஆல்பாபெட்டின் கூகிள், வெர்லி மற்றும் எக்ஸ் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் பொறியாளர்கள் மற்றும் சுகாதார சேவையை வழங்குதல் ஆகியவற்றையும் திட்டமிட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பா..? வெளிவந்த தகவல்கள்..!

இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “ஒன்றாக இணைந்து நமது சமூகத்திற்கு உதவுவோம் என்றும், நமது வணிகங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து சமூகங்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் என்றும் நம்முன் நிற்கும் சவாலை எதிர்கொள்வோம்’ என்றும் கூறியுள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!