ரூ.500 க்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் – எப்படி வாங்குவது? முழு விவரங்களுடன்!
ரூ.500 க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது, அதை பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கேள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
சிலிண்டர்:
நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் சமையல் சிலிண்டர் வாங்குவது பெரும் சிரமமாக உள்ளது. சிலிண்டர் விலை அதிகரிப்பு மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. மக்களுக்கு உதவும் வகையில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் தனது மாநில மக்களுக்காக மகாலட்சுமி எனும் பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ரூ. 500 க்கு எரிவாயு சிலிண்டர்களை பெற முடியும்.
வரலாறு காணாத கனமழை – 2வது நாளாக விமான சேவை ரத்து!
இத்திட்டத்தின் கீழே பயன்பெற விரும்பும் பெண்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். பிபிஎல், ஏ பி எல் மற்றும் அந்த்யோதயா பிரிவைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 2500 பெற விண்ணப்பித்தால் அந்த பெண் குடும்ப தலைவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.