Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – சிறந்த திட்டங்களின் விபரம்!

0
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - சிறந்த திட்டங்களின் விபரம்!
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - சிறந்த திட்டங்களின் விபரம்!
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – சிறந்த திட்டங்களின் விபரம்!

இந்திய அஞ்சல் துறையில் சிறப்பான பல திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த தொகுப்பில் அங்கு செயலில் இருந்து வரும் திட்டங்களில் எது பெஸ்ட் மற்றும் எதில் வட்டி அதிகம் வாங்க முடியும் ஆகிய தகவல்களை பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ்:

போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர்கள், சேமிப்பு கணக்கை புதிதாக ஆரம்பிக்க உள்ளவர்கள் கட்டாயமாக இந்த தகவலை அறிந்து கொள்ளவும். வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வரும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று பிளான் வைத்து இருந்தால் அவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் கொண்ட தொகுப்பு தான் இது. சேமிப்பு கணக்கு இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. கட்டாயமான முறையில் மக்கள் சேமிப்பு கணக்கை வைத்து உள்ளது அவர்களுக்கு பிற்காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸில் உள்ள திட்டங்களில் எது பெஸ்ட் மற்றும் எதில் வட்டி அதிகம் ஆகியவற்றை கீழே விரிவாக பார்ப்போம்.

IPL போட்டிகள்: சமீபத்திய வரலாற்றில் CSK அணியின் 3 சிறந்த கம்பேக் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய அஞ்சல் துறையில், மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட 9 வகையான சிறு சேமிப்பு திட்டங்களும், காப்பீடு திட்டங்களும் மக்களை பெருமளவில் கவர்ந்து விட்டன. பலரும் இந்த திட்டங்களில் சேமிப்பை தொடங்க, முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்பு போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான, நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி எவ்வளவு என்ற விவரத்தை தெரிந்து கொள்ளவும்.

ரயில்களில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

போஸ்ட் ஆபீஸில் உள்ள நல்ல லாபம் தரும் வட்டிகளின் திட்டங்களாக, பொது வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் வருடத்திற்கு 7.6% வட்டி கிடைக்கிறது. 5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 6.8% வட்டி, கிசான் விகாஸ் பத்ராவில் 6.9% வட்டி வழங்கப்படுகிறது. 5 வருட மாத வருமான கணக்கு திட்டத்தில் மாதம் 6.6% வட்டி, 5 வருட மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் ஸ்கீம்மில் 7.4% வட்டி கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், 5வருட ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 5.8% , 1 வருடம் டைம் டெபாசிட் 5.5%, 2 வருடம் டைம் டெபாசிட் 5.5%, 3 வருடம் டைம் டெபாசிட் 5.5%, , 5 வருடம் டைம் டெபாசிட் 6.7% முறையே வட்டிகள் என்று 9 சிறப்பான திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ளது. மேலே கூறிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஏற்ப சலுகைகள் மாறுபடும் என்றும், அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!