IPL போட்டிகள்: சமீபத்திய வரலாற்றில் CSK அணியின் 3 சிறந்த கம்பேக் – ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL போட்டிகள்: சமீபத்திய வரலாற்றில் CSK அணியின் 3 சிறந்த கம்பேக் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL போட்டிகள்: சமீபத்திய வரலாற்றில் CSK அணியின் 3 சிறந்த கம்பேக் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL போட்டிகள்: சமீபத்திய வரலாற்றில் CSK அணியின் 3 சிறந்த கம்பேக் – ரசிகர்கள் உற்சாகம்!

IPL போட்டிகள் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), சமீபத்திய ஆண்டுகளில் சூப்பர் கம்பேக் கொடுத்த சில போட்டிகளை ரசிகர்கள் மீண்டுமாக அசை போடத் துவங்கியுள்ளனர். அது எந்த போட்டி என்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்.

CSK அணி:

பொதுவாக இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி விளையாடுகிறது என்றால் ரசிகர்கள் சில திரில் ஆன அனுபவங்களை பெற தயாராகி விடுவது உண்டு. ஏனென்றால் இதுவரை 4 முறை IPL சாம்பியன்ஷிப் பட்டம் உட்பட விளையாட்டு மைதானங்களில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் CSK அணி வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் ரசிகர்களை அவ்வப்போது பிரமிக்க வைக்கும். குறிப்பாக ஜடேஜாவின் அதிரடி, MS தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆகியவற்றை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் ரசிகர்கள் காத்து கிடப்பது உண்டு.

Airtel, VI, Jio, BSNL நிறுவனங்களில் ரூ.100க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

ஆனால் ஒரு சில நேரங்களில் தோற்கக்கூடிய நிலையில் உள்ள மேட்ச்களில் திடீரென ஒரு வீரம் வந்து எதிரணியை புரட்டி போடும் சில வீரர்கள், ரசிகர்களை எப்போதும் ஒரு பதட்டமான நிலையிலேயே வைத்திருப்பார்கள். அதனால் CSK அணி விளையாடும் ஒவ்வொரு IPL போட்டிகளிலும் ஸ்வாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீப காலங்களில சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்தியன் பிரீமியர் லீக்கில் நம்பமுடியாத சில மறுபிரவேசங்களை கொடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, 2018ம் ஆண்டில் நடைபெற்ற IPL சீசனுக்குப் பிறகு, CSK அணி தடை செய்யப்பட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டுமாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி IPL வரலாற்றில் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தது. இதற்கிடையில் IPL 2022 போட்டிகள் நெருங்கி வருவதால், 2018 லீக்கிற்கு திரும்பியதிலிருந்து CSK அணி கொடுத்த மூன்று சிறந்த மறுபிரவேசங்களை ரசிகர்கள் தற்போது அசைபோட்டு வருகின்றனர். அதன் படி,

IPL 2021 இறுதிப் போட்டி CSK Vs KKR:

பரபரப்பான IPL 2020 ஆட்டத்திற்கு பிறகு, CSK அணி முதல் முறையாக பிளே ஆஃப்களுக்கு தகுதிபெற தவறிவிட்டது. இருந்தாலும் 2021ல் கடுமையாக போராடி டெல்லி கேப்பிடல்ஸை தோற்கடித்து குவாலிபையர் 1 ஆட்டத்தில் CSK த்ரில்லர் வெற்றி பெற்று ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் இறுதி போட்டியான KKR மேட்ச்சை திரும்ப பார்க்கும் போது ஃபாஃப் டு பிளெசிஸின் மாயாஜால 86 ரன்களுக்கும், ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா மற்றும் மொயீன் அலி ஆகியோரின் பங்களிப்பால் CSK அணி 192/3 ரன்களை குவித்தது.

இருப்பினும் ஆட்டத்தை விட்டுக்கொடுக்காத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் 91 ரன்கள் எடுத்தனர். அந்த வகையில் ஃபார்மில் உள்ள வெங்கடேஷ் ஐயரை ஆட்டமிழக்க செய்த ரவீந்திர ஜடேஜாவின் கேட்ச் KKR அணிக்கு சரிவை உண்டாக்கியது. அதனால் KKR 91/0 லிருந்து 125/8 வரை சென்றது. இறுதியில் இயோன் மோர்கன் தலைமையிலான KKR அணி வெறும் 27 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணியிடம் வீழ்ந்தது.

IPL 2018 CSK vs SRH:

IPL லீக்கில் இருந்து இரண்டு ஆண்டுகள் விலகிய பிறகு, 2018ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் CSK அணி கடுமையான அழுத்தத்தில் இருந்தது. ஏலத்தில் பெரும்பாலான முக்கிய வீரர்களை அவர்கள் மீண்டும் வாங்கியிருந்தாலும், பட்டத்திற்கு போட்டியிடும் அளவுக்கு வலுவான பட்டியல் அவர்களிடம் இல்லை என்பது போல் தோன்றியது. அந்த வகையில் CSK அணிக்கு, 140 ரன்களை துரத்துவதே பெரிய விஷயமாக இருந்தது. குறிப்பாக, SRHன் புவனேஷ்வர் குமார் மற்றும் சந்தீப் ஷர்மா, ரஷித் கான் ஆகியோர் சற்று கடினமான பந்து வீச்சை செயல்படுத்தி இருந்தனர்.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – e-ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?

இப்போது, 13வது ஓவரில் 62/6 என்ற நிலையில் இருந்த CSK அணிக்கு அதிசயம் ஒன்று தேவைப்பட்டது. அப்போது ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தனது வாழ்க்கையின் ஒரு சிறந்த இன்னிங்ஸை விளையாடி வியக்கத்தக்க வகையில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்து 42 பந்தில் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன், இறுதிவரை ஷர்துல் தாக்கூர் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி தந்தார். இதன் மூலம் CSK அணி மூன்றாவது IPL பட்டத்தை வென்றது.

2018 போட்டி 1 CSK Vs MI:

2018 இல் CSK இன் மறுபிரவேச சீசனின் முதல் கேம் விதிவிலக்காக மும்பை இந்தியன்ஸ் உடன் ஆரம்பமானது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, 166 ரன்களை சேஸ் செய்யும் போது CSK அணி 51/4 மற்றும் பின்னர் 84/6 என்று தடுமாறியது. இதில் மயங்க் மார்கண்டே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். ஏனெனில் முதல் ஆறு CSK பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 25 ரன்களை கடக்கவில்லை.

இருப்பினும், டுவைன் பிராவோ 30 பந்துகளில் 7 சிக்ஸர்களை தெறிக்க விட்டு 68 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஜஸ்பிரித் பும்ராவின் லாங்-ஆஃப் ஓவர் மற்றும் ஒரு மேஜிக் லாஃப்ட் பந்தும் அடங்கும். இதற்கிடையில் முஸ்தாபிசுர் ரஹ்மான் வீசிய இறுதி ஓவரில் காயம் அடைந்த கேதர் ஜாதவ் 7 ரன்கள் எடுத்த நிலையில் 19வது ஓவரில் பிராவோ ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் CSK அணி ஒரு விக்கெட் மற்றும் ஒரு பந்து மீதமிருக்க திரில் வெற்றி பெற்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!