வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு – உத்தரபிரதேச அரசு உத்தரவு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் அங்கு வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வார இறுதி ஊரடங்கு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வந்த சமயத்தில் ஆரம்ப கட்டத்திலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் விளைவால் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 505 கொரோனா நோயாளிகள் இருந்தனர். மேலும், மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 59 இல் ஒரு நபருக்கு கூட தொற்று பாதிப்பு இல்லை.
அக்டோபரில் பாகிஸ்தான் பறக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி – போட்டி அட்டவணை வெளியீடு!
உத்தரபிரதேச மாநிலத்தில் சனி, ஞாயிற்று கிழமை வார இறுதி ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு நிலைமை மாநிலத்தில் சீரடைந்து உள்ளதால் வார இறுதி ஊரடங்கில் அரசு தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும். அதவாது, சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மக்கள் அனைத்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்கவும், தேவையற்ற இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து. அரசு அனுமதி அளித்துள்ள மற்றும் தடை செய்துள்ள செயல்பாடுகள் குறித்து கீழே விளக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள்:
- சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை சந்தைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்.
- முன்னதாக, சந்தைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. தற்போது, சனிக்கிழமைகளிலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
- மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் சானிடைசர் உபயோகிப்பது போன்ற அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
- மால்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் தெரு ஓரக்கடைகளில் 50% நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- கடுமையான கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றி சினிமா தியேட்டர்கள் 50% நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
- உத்தரபிரதேசம் முழுவதும் நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- ஆகஸ்ட் 16 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.