‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட் – வெண்பா வெளியிட்ட வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்ததாக வரவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் வில்லியாக நடிக்கும் பரினா இதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
விஜய் டிவியில் மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா” தான். தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது. அதே போல் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது கதாநாயகன் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் இருந்து வருகின்றனர். தங்களது குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒன்றாக இருக்கின்றனர். இதனால் வேணு மற்றும் சௌந்தர்யா இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.
பிரபல விஜய் டிவி சீரியலில் இருந்து விலகும் ரக்ஷிதா? அவரே சொன்ன தகவல்!
பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக இருப்பதை அறிந்து வெண்பா மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். இதனால் அதனை தடுக்கும் வேலைகளிலும் இறங்குகிறார். இப்படி விறுவிறுப்பான கட்டங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது அகிலனின் மனைவி அஞ்சலி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர் கூறியும் இதனை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்து அஞ்சலி குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருக்கிறார்.
TN Job “FB
Group” Join Now
இதனை அடுத்து அடுத்து நடக்க இருக்கும் காட்சிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அஞ்சலி தற்போது நிறைமாத கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு சீமந்த விழா நடைபெற இருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அஞ்சலி அழகாக பட்டு உடுத்தி ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அப்போது அவருடன் வெண்பா (நடிகை பரினா) இணைந்து கொண்டு சேர்ந்து நடனமாடுகிறார். இதனால் அடுத்ததாக “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது ரீல்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.