தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – விரைவில் விண்ணப்பம் வினியோகம்!

0
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - விரைவில் விண்ணப்பம் வினியோகம்!
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - விரைவில் விண்ணப்பம் வினியோகம்!
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – விரைவில் விண்ணப்பம் வினியோகம்!

தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2022-2023ம் கல்வி ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் http://scert.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது  என்று அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பம் வினியோகம்:

கொரோனா தொற்று பரவல் தொடங்கியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் நவம்பர் மாதம் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மீண்டும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் கொரோனா பரவலும் குறையத் தொடங்கியதை அடுத்து, தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தற்போது முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளில் 2022-2023 ம் கல்வி ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 4ம் தேதி முதல் http://scert.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் உரிய கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி செலுத்தி இணைய தளத்தில் இருந்து தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினர், ரூ. 500 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள்,  SC, ST வகுப்பினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

தொடக்க கல்வி பட்டயப் படிப்பு என்னும் ஆசிரியர் பயிற்சி பெற விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், BC, BC(M) MBC, SC, SD, SD (A)பிரிவினர் குறைந்தபட்சம் 45% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30 க்கு மிகாமல் இருக்க வேண்டும். SC, ST உள்ளிட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் அதிகபட்ச வயது வரம்பு 35, ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகளுக்கான வயது வரம்பு 40 ஆகும்.

CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி இயக்ககம் தகவல்!

தொடக்க கல்வி பட்டயப் படிப்பு என்னும் ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் ஜூலை 9ம் தேதி வரை (http://scert.tnschools.gov.in )இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் நிதியுதவி, சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்புவோர் அந்தந்த நிறுவனங்களின் இணைய தளத்தில் தனித் தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!